அமைச்சர் (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்)
தமிழ்நாடு ஏராளமான வளங்கள் மற்றும் திறமையான மனித ஆற்றல்களுடன் சிறந்து விளங்குகிறது. இது, புதிய தொழில் தொடங்குவதற்கு, மிகவும் விரும்பத் தக்க இடங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மேலும், மோட்டார் வாகனம், தோல் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள் மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பில் தேசிய அளவில் 8 விழுக்காட்டையும், சுமார் 50 இலட்சம் நிறுவனங்களையும் பெற்று, இத்துறையில் மூன்றாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், இது இந்தியாவின் குறுந்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பில் 15.24 விழுக்காடு பெற்றுள்ளதோடு, விவசாயம் அல்லாத குறுந்தொழில்களில் முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பாகங்கள் தயாரித்து வழங்குவதில் முன்னிலை பெற்றுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும், முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நிறுவுவதற்கான பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து பெற வேண்டிய ஒப்புதல்கள், அனுமதிகள் மற்றும் தடையில்லா சான்றுகள் இணைய வழி ஒற்றைச் சாளர தகவின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கும் அதன் வளர்ச்சிக்கும் அரசினால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் புதிய பார்வையை உருவாக்குவதோடு நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு கூடுதல் உத்வேகத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஊக்குவிப்பு மானியங்கள், நிதி உதவி, சேவைகள், தொழிற்கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் பல்வேறு ஆதரவுச் செயல்பாடுகள் மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு துணை புரிந்து வருகிறது. உங்கள் தேவை நிதி உதவியோ, தொழில் தொடங்குவதற்கான ஆலோசனையோ, தொழில் அலகுக்கான நிலமோ, சந்தைப்படுத்தல் தொடர்பான உதவியோ, ஏற்றுமதிக்கான வாய்ப்போ எதுவாயினும் நாங்கள் உங்கள் தேவையை நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். எங்களால் செயல் படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்த தகவல்களை படித்தறிந்து கொள்ளுங்கள்.
மேலும் பார்க்க
தமிழ்நாடு அரசு கொள்கை வகுத்தல்கள் வழியாகவும் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவை நல்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தொழில் முனைப்பு செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும் சமூகத்தை மேம்படுத்துவதும் முதன்மையான நோக்கமாகும். பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது அரசின் மற்றொரு குவிமையக் குறிக்கோளாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின்அனைத்து நிலைகளிலும் ஆதரவுக்கரம் நீட்டத் தக்கதான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. சுயவேலை வாய்ப்பு, கடனுதவி, சந்தைப்படுத்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரச் சான்றிதழ்கள் என அனைத்து வகையான தேவைகளுக்கும் இத்துறை வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் உடன் நிற்கிறது.
Capital Subsidy
(Incentives)
NEEDS
New Entrepreneur cum Enterprise Development
Scheme
UYEGP
Unemployed Youth Employment Generation Programme
PMEGP
Prime Minister’s Employment Generation
Programme
LTPT
Low Tension Power Tariff Subsidy
Generator Subsidy
(Incentives)
BEIS
Back-ended Interest Subsidy
PEACE
Scheme for Promotion of Energy Audit and
Conservation of Energy
Q-Cert
Scheme for Reimbursement of Charges for Quality
Certification
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வணிக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பு தமிழ் நாட்டு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புலத்தில் வணிகம், முதலீடு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 2019ல் தொடங்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள் குறித்த தரவுகளை வழங்குதல், ஏற்றுமதி செய்வதற்கான அரசின் இசைவுகளைப் பெற வழிகாட்டுதல், தொழில் நுட்பம், நிதித்தேவை மற்றும் மேலாண்மையில் நேரும் சிக்கல்களுக்கு புதினமான தீர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இவ்வமைப்பால் மேற்கொள்ளப் படுகின்றன.
கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சிட்கோ பெரு நிறுவனக் கட்டடத்தை தலைமையிடமாகக் கொண்ட இவ்வமைப்பானது அரசு செயலர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் பார்க்க
மாவட்டத் தொழில் மையங்கள் மற்றும் மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்தில் செயல்படும் ஒற்றைச் சாளர தீர்வு முனையங்கள் தொழில் நிறுவனங்களைத் தொடங்கவும் விரிவாக்கவும் முன்வரும் தொழில் முனைவோர் அரசுத் துறைகள் மற்றும் அரசுசார் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய ஒப்புதல்கள், இசைவுகள், உரிமங்கள் மற்றும் உரிம நீட்டிப்புகள் எளிதான, வெளிப்படையான முறையில் குறித்த காலக்கெடுவுக்குள் பெறுவதை உறுதி செய்கின்றன.
மாநிலத்தில் தொழில் புரிதற்கான நடைமுறைகளைத் தொடர்ந்து எளிமைப் படித்த வேண்டியதன் தேவையை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இசைவான சூழலை உருவாக்குவதில் மாநில அரசுக்குள்ள அக்கறையின் விளைவாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான 160 அரசு சார் சேவைகளை வழங்கும் ஒற்றைச் சாளரத் தகவு வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டில் உள்ளது.
மேலும் பார்க்க
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாநிலத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புலத்தினை ஆதரிப்பதையும் ஊக்குவித்து மேம்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டது. இத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் குறிப்பான முனைப்பு வெளிகளில் உதவி புரியும் பல துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் முனைப்பு மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் கூட்டுறவு ஆகியன முதன்மையான முனைப்பு வெளிகளாகும்.