இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் திட்டத்தினை 2019 விடுதலைத் திருநாளன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அறிவித்தார். வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளிநாட்டு வாணிக இயக்குநரகம் (DGFT) மூலம் மாநிலங்கள்/ ஒன்றிய ஆளுகைப் பகுதி அரசுகளுடன் இணைந்து ஒவ்வொரு மாநிலம்/ஒன்றிய ஆளுகைப் பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்துவமான ஒரு மாவட்ட ஏற்றுமதி திட்டத்தைத் (DEP) தயாரித்து செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு மாவட்ட ஏற்றுமதித் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெளிநாட்டு வாணிக கூடுதல் இயக்குநரைக் கூடுதல் தலைவராகவும் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் அரசுத்துறை பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை (DEPC) அமைக்க 23/01/2020 & 16/03/2020 தேதியிட்ட ஆணைகளில் ஆணையிட்டுள்ளது.
மாவட்ட ஏற்றுமதித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்துவமான ஒரு பொருள் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, அந்தக் குறிப்பிட்ட பொருளுடன் தொடர்புடைய தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்கவும் அவற்றுக்குத் தேவைப்படும் வசதிகளை வழங்குவதற்குமான ஒரு நிலையான பொறிமுறையை அமைக்க முயலும்.
வ எண் | மாவட்டம் | பொருள் |
---|---|---|
1 | அரியலூர் | முந்திரி பதப்படுத்துதல் |
2 | செங்கல்பட்டு | தானி உதிரி பாகங்கள் |
3 | சென்னை | பொறியியல் பொருட்கள் மற்றும் தானி உதிரி பாகங்கள் |
4 | கோயம்புத்தூர் | மோட்டார் பம்புகள் |
5 | கடலூர் | முந்திரி |
6 | தருமபுரி | ஆயத்த ஆடைகள் |
7 | திண்டுக்கல் | தென்னை நார்க் கழிவுப் பொருட்கள் |
8 | ஈரோடு | கைத்தறி மற்றும் விசைத்தறித் துணிகள் |
9 | கள்ளக்குறிச்சி | உணவுப்பொருட்கள்- அரிசி |
10 | காஞ்சிபுரம் | ஜவுளி ஆடைகள் |
11 | கன்னியாகுமாரி | முந்திரி |
12 | கரூர் | ஜவுளி |
13 | கிருஷ்ணகிரி | உணவுப் பதப்படுத்துதல் – மா |
14 | மதுரை | ஆயத்த ஆடைகள் |
15 | மயிலாடுதுறை | அரிசி |
16 | நாகப்பட்டினம் | கடல் உணவுகள் |
17 | நாமக்கல் | கோழித் தீவனம் |
18 | பெரம்பலூர் | சோளம் |
19 | புதுக்கோட்டை | பொறியியற் பொருட்கள் |
20 | இராமநாதபுரம் | கடல் உணவுகள் |
21 | இராணிப்பேட்டை | தோல் பொருட்கள் |
22 | சேலம் | வெள்ளி ஆபரணங்கள் |
23 | சிவகங்கை | தென்னை நார்ப் பொருட்கள் |
24 | தென்காசி | தென்னை நார்க் கழிவுப் பொருட்கள் |
25 | தஞ்சாவூர் | வேளாண் பொருட்கள் – தேங்காய் |
26 | நீலகிரி | தேயிலை |
27 | தேனி | ஜவுளி |
28 | திருவள்ளூர் | பொறியியல் பொருட்கள் மற்றும் தானி உதிரி பாகங்கள் |
29 | திருவண்ணாமலை | சமையல் எண்ணெய் |
30 | திருச்சி | பொறியியல் பொருட்கள் |
31 | திருப்பத்தூர் | தோல் பொருட்கள் |
32 | திருவாரூர் | வேளாண் பொருட்கள் |
33 | தூத்துக்குடி | கடல் உணவுகள் |
34 | திருநெல்வேலி | ஆயத்த ஆடைகள் |
35 | திருப்பூர் | உள்ளாடைகள் |
36 | வேலூர் | தோல் பொருட்கள் |
37 | விழுப்புரம் | வேளாண் பொருட்கள் – அரிசி |
38 | விருது நகர் | மருத்துவம் சார் துணிகள் |