‘சேகோசர்வ்’ என்று அழைக்கப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சவ்வரிசி
உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கம், மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யும்
மாவட்டங்களான சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம்,
பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு
உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்கான சந்தை
வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1981-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
இச்சங்கம் துவங்கப்படுத்துவதற்கு முன்பு, சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு
உற்பத்தியாளர்கள் குறிப்பாக சிறு தொழில் நிறுவனங்கள், அமைப்பு சார்ந்த சந்தை வாய்ப்பு
இல்லாததினால், வியாபார இடைத்தரகர்களின் சுரண்டல் சூழ்நிலையின் காரணமாக பெரிதும்
பாதிக்கப்பட்டனர்.
உற்பத்தியாளர்களின் இவ்வாறான துயரினை போக்கவும், அவர்களது உற்பத்தி
பொருட்களுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் நிறுவப்பட்ட சேகோசர்வ்
சங்கமானது, தனது உறுப்பினர்களுக்கு நிதி உதவி மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளையும்
வழங்கி வருகிறது.