தொழில் வணிக ஆணையரகம்
- தொழில் முனைவோர் சாதகமான மற்றும் வாய்ப்புள்ள தொழில்களைக்
கண்டறிவதற்கும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற ஏதுவாக திட்ட அறிக்கைகளைத்
தயார் செய்யவும் உதவி புரிதல்.
- தொழில் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வகுக்கப்படும் ஒன்றிய மற்றும் மாநில
அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாங்கில்
விழிப்புணர்வுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள், பரப்புரைகள் நடத்துதல்.
- தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வழங்குதல்.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில் நிறுவனம் தொடங்க
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அரசு சார் அமைப்புகளிடமிருந்து பெறவேண்டிய
இசைவுகள், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒற்றைச் சாளரத் தகவு மூலம் பெற வழி
வகை செய்தல்.
- உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற உதவுதல்.
- தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கைப்படி
மானியங்கள் மற்றும் ஊக்குதவிகள் வழங்குதல்.
- ஒன்றிய அரசின் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தினைச்
செயல்படுத்துதல்.
- மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத்
திட்டத்தினைச் செயல்படுத்துதல்.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவற்றிடமிருந்து உற்பத்திப்
பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்ற பெருந்தொழில் நிறுவனங்கள் நிலுவை
வைத்திருக்கும் தொகையினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவன
வசதியாக்கக் குழு மூலம் வசூலித்துத் தருதல்.
- குளிர்ப்பதனி மற்றும் காற்றுப் பதனி, கருவி மற்றும் அச்சு பாடப் பிரிவுகளில் பட்டயச்
சான்றிதழ் வழங்குதல்.
- வீட்டு உபயோக மின் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணைகளைச்
செயல்படுத்துதல்.
- ஏற்றுமதி மேம்பாட்டு முகமை மூலம் ஏற்றுமதியினை ஊக்குவித்தல்.
- ஒன்றிய மற்றும் மாநில அரசு வழங்கும் பதக்கங்களுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத்
தொழில் நிறுவனங்களைத் தெரிவு செய்து பரிந்துரைத்தல்.