Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English

முதலீட்டு மானியம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கீழ்கண்ட மானியங்கள் வழங்கப்படுகிறது.:

  • தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • மகளிர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வழங்கப்படுகிறது.
  • குறு நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 10 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
  • நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் முறையே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உயர்வு பெறும் பட்சத்தில் அந்நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • மாசற்ற மற்றும் சுற்றுச்சூலில் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.
அடிப்படைத் தகுதிகள்
  • மாநிலத்தின் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள்
  • தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் அமைக்கப்படும் கீழ்கண்ட 24 சிறப்பு வகை சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்:
  • மின் மற்றும் மின்னணு பொருட்கள்
    தோல் மற்றும் தோல்பொருட்கள் உற்பத்தி
    வாகன உதிரி பாகங்கள்,
    மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள்
    சுரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள்
    ஏற்றுமதிக்கான தங்கம் மற்றம் வைர நகைகள்
    மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்
    மின் வாகன கடன்கள், மின்னேற்ற உற்பத்தி கட்டமைப்புகள் மற்றும் கடன்கள்
    சிக்கன அடக்கவிலை கட்டுமானப் பொருட்கள்
    ஆயத்த ஆடைகள்
    உணவு பதப்படுத்துதல்
    நெகிழி (ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி மற்றும் தூக்கி எறியப்படும் நெகிழி நீங்கலாக)
    இரப்பர் உற்பத்தி நிறுவனங்கள்
    உயிர் தொழில்நுட்பம்
    பெட்ரோலிய இரசாயனம் மற்றும் சிறப்பு இரசாயனங்கள்
    மருத்துவ உபகரணங்கள் மற்றும் கடன்கள்
    விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள்
    தொழில் நுட்ப ஜவுளி மற்றும் மருத்துவ ஜவுளி
    விண்வெளி, பாதுகாப்பு பயன்பாடுகள் மற்றும் உபகரணங்கள்
    மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றம் உற்பத்தி
    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களுக்கு பதிலான மாற்று நிகிழி
    மின்னணு கழிவு பதப்படுத்துதல்
    தொழில் 4.0
  • தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 254 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்
  • மாநிலத்தின் 388 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்
  • மேற்கண்ட வகைகளைச் சார்ந்த, தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள்
  • 2020-2021 ஆம் ஆண்டில் 3,491 நிறுவனங்களுக்கு ரூ.26999.37 இலட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய கிளிக் செய்யவும்