தொழில்வளர்ச்சியில் பின்தங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள 254 வட்டாரங்களில் துவங்கப்படும் புதிய குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்காக வாங்கப்படும் நிலங்களின் மதிப்பில் பதிவுத் துறைக்கு செலுத்தப்படும் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப வழங்கப்படும்.
நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் முறையே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உயர்வு பெறும் பட்சத்தில் அந்நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
மாநிலத்தில் உயர் வளர்ச்சி திறன் கொண்ட சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதிக்காக, உற்பத்தி மற்றும் சேவைத் துறை இரண்டிலும், ஆரம்ப பொது சலுகைகளைப் பயன்படுத்தி எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச் மூலம் பங்கு மூலதனத்தை திரட்டுவதற்கு அரசு ரூ.30.00 இலட்சம் அதிகபட்சமாக ஆரம்ப பொது சலுகைகளை பெறுவதற்கு செலவிட்டப்பட்ட தொகையில் 50 விழுககாடு திரும்ப வழங்கப்படும்.
மாநிலத்தில் அமைந்துள்ள உற்பத்தி சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் காப்புரிமை பதிவுக்காக செலவிடப்பட்ட தொகையில் 75 சதவீதம், ரூ.3 இலட்சத்திற்கு மிகாமலும் மற்றும் வர்த்தக முத்திரை பதிவு அல்லது புவிசார் குறியீடு பதிவுக்காக செலவிட்டப்பட்ட தொகையில் 50 சதவீதம் ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.25,000 மிகாமல் வழங்கப்படும்.