டான்கோபெட் இணையதளம் (கயிறு தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள்)
கயிறு சங்கங்கள்
- இந்தியாவிலேயே கேரள மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடுதான் கயிறு
தொழிலில் உயர்வான இடத்தை வகித்து வருகிறது. பழுப்பு நார் தயாரிப்பதில் தமிழ்நாடு
முன்னிலை வகித்து வருகிறது. தமிழக அரசும் கயிறு வாரியமும் தேங்காய் மட்டையின்
உபயோகத்தினை மேலும் அதிகரிக்கவும், பெருவாரியாக வேலை வாய்ப்பு உருவாக்கவும்
திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
- தொழில் வணிகத்துறையின் கீழ் 64 கயிறு தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் நார்
பிரிப்பது,நூலிழை, சுருள், கயிறு, தரை விரிப்புகள், கயிறு மிதியடிகள் மற்றும் இரப்பர் பால்
கலந்த கயிறு மெத்தைகள் ஆகிய பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.
- 64 கயிறு சங்கங்களில், பிரதம கயிறு சங்கங்களின் கயிறு பொருட்களை விற்பனை
செய்வதற்காக மண்டல அளவில் நான்கு கயிறு விற்பனை சங்கங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த 64 கயிறு தொழிற் கூட்டுறவு சங்கங்கள் 11103 உறுப்பினர்களை
கொண்டு ரூ.279.52 இலட்சம் பங்கு மூலதனத்துடன் இயங்கி வருகின்றன.