அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையம் சென்னை கிண்டியில் 1962 ஆண்டு தொடங்கப்பட்டு இரண்டு பாடப்பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகளை வழங்கி வருகிறது. எந்திரப் பொறியியல் பட்டயம் (கருவி & அச்சு) எந்திரப் பொறியியல் பட்டயம் (குளிர்சாதனம் & குளிர்ப்பதனம்) அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஆண்டுக்கு 144 மாணவர்கள் வீதம் (முதலாண்டு 120 + நேரடி இரண்டாமாண்டு 24) சேர்க்கை புரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருவிப் பொறியியல் பயிலகம், திண்டுக்கல் 1961 ல் தொடங்கப்பட்டு அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்திரப் பொறியியல் பட்டயம் (கருவி & அச்சு) பாடப்பிரிவின் கீழ் மூன்றாண்டு பட்டயப்படிப்பினை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 54 மாணவர்கள் வீதம் (முதலாண்டு 45 + நேரடி இரண்டாமாண்டு 9) சேர்க்கப்படுகின்றனர்.
பீங்கான் தொழிநுட்பப் பயிலகம், விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பத்தில் மூன்றரை ஆண்டு பட்டயப் படிப்பினை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் 60 மாணவர்கள் வீதம் (முதலாண்டு 50 + நேரடி இரண்டாமாண்டு 10) சேர்க்கப்படுகின்றனர். இப்பயிலகமானது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மற்றும் அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் பெற்றதாகும்.
மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்பொருள்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தோடு உற்பத்தியாளர்களுக்கு மத்திய மின் பொருள் சோதனைக்கூடம், காக்களூர் ஆய்வுக்கூடத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கூடத்தில் அமைந்துள்ள சோதனை வசதிகள் பயிற்சியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கீழ்கண்ட மின்பொருள்களை சோதனை செய்வதற்க்குண்டான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
1. பி.வி.சி கம்பி வடங்கள் 2. மிக்சிகள் 3. மின் விசிறிகள் 4. சுவிட்ச்கள் 5. ப்ளக்ஸ் மற்றும் ஸாக்கெட்டுகள் 6. ப்ளோரோசென்ட் குழல் விளக்குகள் 7. ப்ளோரோசென்ட் குழல் விளக்குக்குண்டான ஸ்டார்ட்டர்கள் 8. ப்ளோரோசென்ட் குழல் விளக்குக்குண்டான சோக்குகள் 9. மின் அளவு மானிகள் 10. இம்மர்சன் வாட்டர் ஹீட்டர்கள் 11. ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்கள் 12. பி.வி.சி குழாய்கள் மற்றும் 13. மின் பொருத்தி சாதனங்கள்