தொழிற்கூட்டுறவுச் சங்கங்களுக்கு போதிய அளவில் கடன் வசதியளிக்க
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள் தயங்கிய நிலையில், தொழிற் கூட்டுறவு
சங்கங்களுக்கு கடன் வசதியளிப்பதற்கென தாய்கோ வங்கி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு
தொழிற் கூட்டுறவு வங்கி, 18.9.1961 அன்று நிறுவப்பட்டது.
நபார்டு மறு நிதி உதவித் திட்டத்தினை இவ்வங்கி தமிழ்நாடு மாநில கூட்டுறவு
வங்கியின் மூலம் செயல்படுத்த மத்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வங்கி,சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதுடன் பொது
மக்களுக்கு நகைக் கடன், வீடுகட்ட கடன்/வீடு அடமானக்கடன், பொதுத்துறை மற்றும்
அரசுத்துறைப் பணியாளர்களுக்கு தனிநபர்க் கடன் போன்ற பல்வகைக் கடன்களை அளித்து
வருகிறது.
மேலும், இவ்வங்கி பொது மக்களுக்கு நகைக் கடன், வீடுகட்ட கடன்/வீடு
அடமானக்கடன்மற்றும் அரசுத்துறைப் பணியாளர்களுக்கு தனிநபர்க் கடன்களை
அளிப்பதோடு மட்டுமல்லாமல் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு குறுகிய கால
கடன்கள் மற்றும் அதிகப்பற்று கடன்கள் போன்ற பல்வகைக் கடன்களையும் அளித்து வருகிறது.
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் 47 கிளைகளுடன்
செயல்பட்டு வருகின்றது.