சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மக்கள் குழுவினரிடையே
வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திட்டம்
விண்ணப்பதாரர் வயது பொதுவாக 18-45 பெண்கள்/சிறுபான்மையினர்/
பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல்
வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்
திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு 55 வயது
வரை தளர்வு உண்டு
குறைந்த பட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்
தொழில் முனைவோர் பங்களிப்பு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில்
10% சிறப்புப் பிரிவினருக்கு 5%
வணிக வங்கிகள் மூலம் கடனுதவி
தனி நபர் முதலீட்டு மானியம் திட்டத்தொகையில் 25% (உச்ச வரம்பு ரூ.3.75 இலட்சம்)