Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் நிர்வாக அமைப்பு
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
ஆணையரகம்
சிட்கோ
டான்சி
ஈடிஐஐ
டான்சிம்
எம்-டிஐபிபி
ஆணையரகம்
38 மா தொ மை கள்
தொழிற்கூட்டுறவுகள்
சோதனைக் கூடங்கள்
இண்ட்கோசெர்வ்
(டீசெர்வ் மற்றும் 16 தொழிற்கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள்)
சேகோசெர்வ்
(ஸ்டார்ச் மற்றும் சேகோ தொழிற்கூட்டுறவு சங்கம்)
தாய்கோ வங்கி
(47 கிளைகள்)
பிற தொழிற்கூட்டுறவுகள்
(279)

தொழில் வணிக ஆணையரகத்தின் பணிகள்

  • தொழில் முனைவோர் சாதகமான மற்றும் வாய்ப்புள்ள தொழில்களைக் கண்டறிவதற்கும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற ஏதுவாக திட்ட அறிக்கைகளைத் தயார் செய்யவும் உதவி புரிதல்
  • தொழில் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வகுக்கப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாங்கில் விழிப்புணர்வுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள், பரப்புரைகள் நடத்துதல்
  • தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல்
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில் நிறுவனம் தொடங்க பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அரசு சார் அமைப்புகளிடமிருந்து பெறவேண்டிய இசைவுகள், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒற்றைச் சாளரத் தகவு மூலம் பெற வழி வகை செய்தல்
  • உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற உதவுதல்
  • தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கைப்படி மானியங்கள் மற்றும் ஊக்குதவிகள் வழங்குதல்
  • ஒன்றிய அரசின் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தினைச் செயல்படுத்துதல்
  • மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தினைச் செயல்படுத்துதல்
  • குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு அவற்றிடமிருந்து உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்ற பெருந்தொழில் நிறுவனங்கள் நிலுவை வைத்திருக்கும் தொகையினை குறு மற்றும் சிறு தொழில்நிறுவன வசதியாக்கக் குழு மூலம் வசூலித்துத் தருதல்
  • குளிர்ப்பதனி மற்றும் காற்றுப் பதனி, கருவி மற்றும் அச்சு பீங்கான் தொழில்நுட்பம் பாடப் பிரிவுகளில் பட்டயச் சான்றிதழ் வழங்குதல்
  • வீட்டு உபயோக மின் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணைகளைச் செயல்படுத்துதல்
  • ஏற்றுமதி மேம்பாட்டு முகமை மூலம் ஏற்றுமதியினை ஊக்குவித்தல்.
  • ஒன்றிய மற்றும் மாநில அரசு வழங்கும் பதக்கங்களுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைத் தெரிவு செய்து பரிந்துரைத்தல்