Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
தரக்கட்டுப்பாடு ஆணைகளை செயல்படுத்துதல்.

ஒன்றிய அரசினால் வெளியிடப்பட்டுள்ள, இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016ன் கீழ் பெறப்பட்ட பல்வேறு தரக்கட்டுப்பாடு ஆணைகளை இத்துறை செயற்படுத்துகிறது. தரக்கட்டுப்பாடு ஆணைகளை அமல்படுத்தவும், நுகர்வோரிடையே தரமான மின் பொருட்களை உபயோகிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘அதிகார அளிக்கப்பட்ட அலுவலர்’ ஆக மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர்களும், சென்னையில் மண்டல இணை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு உபயோக மின் பொருட்கள் (தரக்கட்டுப்பாடு) ஆணை 1981, எண்ணெய் அழுத்த அடுப்புகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை 1997 மற்றும் மின்கம்பிகள், வடங்கள், உபகரணங்கள் மற்றும் மின் பாதுகாப்புக் கருவிகள் மற்றும் பாகங்கள் (தரக்கட்டுப்பாடு ஆணை) 2003 ஆகிய தரக்கட்டுப்பாடு ஆணைகள் அமல்படுத்தப்படுகின்றன.