38 மாவட்டத் தொழில் மையங்கள் ஆணையரகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. சாதகமானதொழில்களைக் கண்டறிவது, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது, அரசு வழங்கும் பல்வித ஒப்புதல்கள் மற்றும் உரிமங்கள் பெறஉதவுவது மட்டுமன்றி அரசுத் திட்டங்கள் மூலம் கடனுதவி வழங்குதல், மானியம் வழங்குதல் போன்றவற்றால் இவை தொழில் முனைவோரின் நிதித்தேவைகளுக்கும் தீர்வளிக்கின்றன.