உங்கள் தொழில் நிறுவனத்தைத் தமிழ்நாட்டில் தொடங்குங்கள்
மாநிலத்தில் தொழில் தொடங்குதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் உள்ளூர்
மற்றும் பன்னாட்டுத் தொழில் முனைவோர்க்கு இசைவான சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு
அரசு தமிழ் நாடு வணிக நடைமுறைகள் எளிதாக்கும் சட்டம் 2018 ஐ இயற்றியுள்ளது.
- நாட்டில் முதலீடு செய்ய அதிகம் விரும்பப்படும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பதான
இம்மாநிலத்தின் ஆர்வத்தையும் முனைப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக்
கொண்டது இச்சட்டம்
- தொழில் நிறுவனங்களைத் தொடங்கவும் விரிவாக்கம் செய்யவும் தேவைப்படும்
ஒப்புதல்கள்/இசைவுகள், தொழில் நிறுவனத்தை நடத்தத் தேவையான உரிமங்கள்
மற்றும் காலமுறைப்படியான அதன் புதுப்பித்தல்களுக்கான விண்ணப்பங்களைப்
பெறுதற்கான ஒற்றை முனையத்தை உருவாக்கி அவ்விண்ணப்பங்களின் குறித்த
காலக்கெடுவுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை இச்சட்டம் உறுதி செய்கிறது
-
(www.tnswp.com) தளம் மூலம் நகர் ஊரமைப்புத்துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும்
நலத்துறை, பொது நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை உள்ளிட்ட துறைகளிலிருந்து
கட்டுமானத்துக்கு முந்தைய நிலை, செயல்பாடுகளைத் தொடங்குதற்கு முந்தைய
நிலைகளில் பெறாத்தக்கவை உள்ளிட்ட 160 சேவைகளைப் பெறலாம்
-
இதுவரை 2806 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2048ன் மேல் உரிய நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது