Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English

தரச்சான்றிதழ் பெறுவதற்கான மானியதிட்டம்

இத்திட்டம் மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தரமான செயல்முறை மற்றும் பொருட்களை உருவாக்குவதற்கான தரச்சான்றிதழ்களான சர்வேதேச தரச் சான்றிதழ் ISO 9000/ ISO 9001/ ISO 14001/ ஆபத்து பகுப்பாய்வு மற்றம் நெருக்கடியான கட்டுப்பாட்டு (HACCP), ISO 22000, நல்ல சுகாதார நடைமுறைகள் சான்றிதழ்(GHP), நல்ல உற்பத்தி நடைமுறைகள் சான்றிதழ் (GMP), இந்திய தரச்சான்றிதழ் (BIS), பூஜ்ஜிய குறைபாடு மற்றும் பூஜ்ஜிய விளைவுச் சான்றிதழ் (ZED) அல்லது இந்தியாவில் தகுதிவாய்ந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு தரச்சான்றிதழ் பெறுவதை ஊக்கப்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செலுத்திய கட்டணம், தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் மற்றம் சர்வதேச தரச்சான்றிதழ் பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் அரசால் திரும்ப வழங்கப்படுகிறது.

2019-2020 ஆம் ஆண்டில் 92 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.60.35இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது