இண்ட்கோசர்வ் என்று பரவலாக அழைக்கப்படும் தமிழ்நாடு சிறுதேயிலை
விவசாயிகளின் தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையம் 1965-இல்
உருவாக்கப்பட்டது.
இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள் உறுப்பினர் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும்
தேயிலைத்தூளை சந்தைப்படுத்தி, அதன் மூலம் அதிக விலை பெற்றுத் தருவதே ஆகும்.
மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான இடுபொருள்களை
கொள்முதல் செய்து வழங்குவதோடு அல்லாமல், குன்னூர், கோயமுத்தூர் மற்றும் கொச்சி
ஆகிய இடங்களில் சேமிப்பு கிடங்கு வசதிகளையும்,தேவையான உரங்கள், சணல் பைகள்,
இயந்திர உதிரிபாகங்கள் மற்றும் இதரத் தேவையான பொருட்களை சிறுதேயிலை
விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. உறுப்பினராக உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு
நிதி உதவியும் அளித்து வருகிறது. ஊட்டி டீ திட்டத்தின் மூலம் தேயிலைத்தூளினை பொது
விநியோகத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது.
ஊட்டி டீ தேயிலை தூளை விற்பனை செய்வதோடு அல்லாமல் இண்ட்கோசர்வானது
சந்தையில் தனது பெயரில் தேயிலைத்தூளை பாக்கெட்டுகளின் மூலம் விற்பனை செய்து
வருகிறது.