மாநில அளவில் தொழில் வணிகத்துறை ஆணையரகமும், சென்னை மாவட்டத்திற்கு மண்டல இணை இயக்குநர் சென்னை அவர்களும் மற்றும் இதர மாவட்டங்களுக்கு பொது மேலாளர்கள் மாவட்ட தொழில் மையமும் செயல்படுத்தும் நிறுவனங்கள் ஆகும்.
2021-22
இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைமையாகத் திகழும் தமிழகத்தில், 23.60 இலட்சம் பதிவு செய்யப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் தமிழகம் உதாரணமாக தோல் மற்றும் அதை சார்ந்த பொருட்கள்,பொறியியல் பொருட்கள், வார்ப்புப் பொருட்கள், பம்புகள் மற்றும் ஆடை உற்பத்தி தொழில்கள் போன்ற பல துறைகளில் தலைமைத்துவம் வகிக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், திறன் மேம்படுத்தப்பட்ட மனித வளத்தின் தேவை மட்டுமே இத்துறைகளின் சவாலாக உள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன்மிகு மனித ஆற்றலை உருவாக்கி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிலேயே பயிற்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி, அத்தொழில் நிறுவனங்களிலேயே வேலைவாய்பை அளித்தல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி செலவினங்களில் ஏற்படும் ஒரு பகுதியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.
விண்ணப்பதாரர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகங்கள் / தேசிய திறன் மேம்பாட்டு முகவர்கள் மற்றும் அதைப்போன்ற நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பை பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பொறியியல், டிப்ளமோ அல்லது தொழில் பயிற்சி நிறுவனத்தில் படித்த 18-25 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் திறன் பயிற்சி சான்றிதழ்களுடன் கூடிய வேலைவாய்ப்பினை வழங்கும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பயிற்சி அளித்தமைக்கு தேவையான தகுதிகள் பயிற்சியாளர்களுக்கு இருத்தலை உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின்படி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தேவையான திறன் பயிற்சியினை தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு 6 மாத காலத்திற்கு வழங்கும் இக்காலத்தில் குறைந்தபட்ச ஊதியமாக மாதத்திற்கு ரூ.5000/- வீதம் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும். அத்தொழில் பயிற்சி காலத்திற்க்கு அரசு மாதாந்திரமாக ரூ.2000/- வீதம் 6 மாத காலத்திற்கு பயிற்சி ஊக்கத்தொகையைத் அளிக்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயனாளிகளுக்கு பின்னர் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால், பயிற்சி பெற்றோரின் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.