நீட்ஸ் திட்டத்தின் கீழ் சேவைத் தொழில் நிறுவனங்களுக்கும் உதவி வழங்கப்படும். மாவட்டத் தொழில் மையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலும் ஆதரவும் நான் இந்த அழகு நிலையம் தொடங்க உதவி புரிந்தன. முதல் தலை முறைத் தொழில் முனைவோராகத்தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிறுவ நீட்ஸ் திட்டமே காரணம்
தென்னை நார் இழை மற்றும் தேங்காய் தொடர்பான தொழில்களில் அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய வாய்ப்பினைச் சாதகப்படுத்திக் கொள்ள விழையும் தொழில் முனைவோர், குறிப்பாக பெண் தொழில் முனைவோர், அரசு மானியம் மற்றும் ஆதரவு பெற மாவட்டத் தொழில் மையத்தினை அணுகிட வேண்டும்.
பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்கும் அரசு திட்டங்கள் குறித்துக் கேள்வியுற்ற நான் கூடுதல் தகவல்களைப் பெற மாவட்டத் தொழில் மையத்தினை அணுகினேன். அவர்கள் ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான நடைமுறைகள், ஆஆவணப்படுத்தல்கள் குறித்து எனக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். ஆவணங்களை வழங்கிய இரண்டு மாதங்களுக்குள் மானியம் வழங்கப்பட்டது. இந்த உற்பத்தி அலகை நிறுவ வழங்கிய வழிகாட்டுதல் மற்றும் உதவிக்கான மாவட்டத் தொழில் மையத்துக்கு நன்றி தெரிவிக்க விழைகிறேன்.